உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  டி.என்.ஏ., நிறுவன அதிகாரிகள் 2 பேர் வெளிநாடு செல்ல அனுமதி 

 டி.என்.ஏ., நிறுவன அதிகாரிகள் 2 பேர் வெளிநாடு செல்ல அனுமதி 

பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்த வழக்கில், டி.என்.ஏ., நிறுவன அதிகாரிகள் 2 பேர் வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் போது, சின்னசாமி மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதுதொடர்பாக ஆர்.சி.பி., அணியின் விளம்பர நிறுவனம் டி.என்.ஏ., மீது வழக்குப்பதிவானது. சிலர் கைதாகி ஜாமினில் வந்தனர். இந்நிறுவனத்தினர் தங்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிறுவனத்தின் இயக்குநர் சுனில், மூத்த நிகழ்ச்சி மேலாளர் கிரண் உள்ளிட்டோர், பிரேசில் நாட்டிற்கு செல்ல அனுமதி கேட்டு, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், இருவரும் பிரேசில் செல்ல ஜூன் 1 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி