உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிகிச்சை அளிக்காமல் சண்டை; இரு மகளிர் டாக்டர்கள் சஸ்பெண்ட்

சிகிச்சை அளிக்காமல் சண்டை; இரு மகளிர் டாக்டர்கள் சஸ்பெண்ட்

பெலகாவி: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதில், சண்டை போட்டுக்கொண்ட இரண்டு பெண் டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவின் அரசு சார்ந்த தாய் - சேய் மருத்துவமனையில் டாக்டர் ஜெயலட்சுமி முசாளே மற்றும் டாக்டர் கமலா குலகேரி பணியாற்றுகின்றனர். ஒரே மருத்துவமனையில் பணியாற்றினாலும், இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. 'நான் பெரியவரா', 'நீ பெரியவரா' என்ற ஈகோ பிரச்னை இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறார்கள், கர்ப்பிணியருக்கு சரியாக சிகிச்சை அளிப்பது இல்லை. ஒருவர் கவனிக்கும் கர்ப்பிணியை மற்றொரு டாக்டர் கவனிக்க மறுத்தார். அதே டாக்டர் வந்து பார்த்து கொள்ளட்டும் என, அலட்சியம் செய்வர். இவர்களின் சண்டையால், கர்ப்பிணியர், குழந்தை பிரசவித்த பெண்கள், சிறார்கள் பாதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதவித்தனர். இது குறித்து, சமூக வலைதளங்களில் வெளியானது. இதை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை, டாக்டர்கள் ஜெயலட்சுமி முசாளே, கமலா குலகேரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை