உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குடிப்பழக்கத்தை மறக்கடிக்க கொடுத்த மருந்தால் இருவர் பலி

குடிப்பழக்கத்தை மறக்கடிக்க கொடுத்த மருந்தால் இருவர் பலி

கலபுரகி: கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகாவின் புரகபள்ளி கிராமத்தில் வசித்தவர் லட்சுமி நரசிம்மலு, 45. ஷஹபாத் பட்டணாவில் வசித்தவர் கணேஷ் ராத்தோட், 30. இவர்கள் இருவருமே குடிப்பழக்கத்துக்கு அடியானவர்கள். இந்த பழக்கத்தில் இருந்து இவர்களை விடுவிக்க, குடும்பத்தினர் முயற்சித்தும் முடியவில்லை. சேடம் தாலுகாவின் இமடாபுரா கிராமத்தில் வசிக்கும் சாயப்பா முத்யா என்பவர், குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க மருந்து தருவதாக கேள்விப்பட்டு, நேற்று காலை லட்சுமி நரசிம்மலுவையும், கணேஷ் ராத்தோடையும் அவர்கள் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு மருந்து கொடுப்பதாக கூறிய சாயப்பா முத்யா, இருவரின் மூக்கில் மருந்து ஊற்றினார். மருந்து கொடுத்த சிறிது நேரத்தில், இருவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, ஜிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். சாயப்பா முத்யா மீது, சேடம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !