உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 16 வயதுக்கான கிரிக்கெட் மைசூரின் இருவர் தேர்வு

16 வயதுக்கான கிரிக்கெட் மைசூரின் இருவர் தேர்வு

– நமது நிருபர் –: உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நவ., 14 முதல் டிச., 8ம் தேதி வரை பி.சி.சி.ஐ., – விஜய் மெர்சன்ட் டிராபி 2026 – 27 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கர்நாடக அணிக்கு, மைசூரை சேர்ந்த புவன் கவுடா, பிரீத்தம் ஆகிய இருவரும் தேர்வாகி உள்ளனர். மைசூரு கே.எஸ்.சி.ஏ., மண்டலத்துக்கு உட்பட்ட ராவ் பகதுார் நரசப்பா கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடும் புவன் கவுடா, விஜயநகர் இரண்டாவது ஸ்டேஜில் உள்ள கேம்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவர், 2025 – 26ல் நடந்த மண்டல அளவிலான, லீக் போட்டியில், ஒன்பது போட்டிகளில், 45 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான லீக் போட்டியில், 15 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 320 ரன்கள் எடுத்துள்ளார். அதுபோல, கே.எஸ்.சி.ஏ., மைசூரு மண்டலத்துக்கு உட்பட்ட கராவலி கிரிக்கெட் கிளப் சார்பில் பிரீத்தம் விளையாடி வருகிறார். இவர், பியூச்சர் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். நடப்பாண்டு நடந்த, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், 10 விக்கெட் எடுத்தது மsட்டுமின்றி, 274 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !