உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரேணுகாசாமி கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய இருவர்

ரேணுகாசாமி கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய இருவர்

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பட்டனகெரே ஷெட் வாட்ச்மேன், ஊழியர் ஆகியோர் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களை தெரியாது என்று கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் சிறையில் இருந்தபடி ஆஜராகினர். பட்டனகெரே ஷெட்டில் வைத்து ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டதால் அங்கு வாட்ச்மேனாக பணியாற்றி வந்த நரேந்திர சிங், ஷெட்டில் வேலை செய்து வந்த கிரண் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணையில் இரு வரும் தங்களுக்கு, தர்ஷன் உட்பட யாரையும் தெரியாது என்று கூறினர். இதனால், இவர்களை பிறழ் சாட்சியாக அறிவிக்க வேண்டும் என்று அரசு சிறப்பு வக்கீல் கூறினார். இதற்கிடையில், தனது முதுகு வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தர்ஷன் மனுதாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !