உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விசிட்டிங் கார்டு தலைவர்கள் வேண்டாம் மத்திய அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தல்

 விசிட்டிங் கார்டு தலைவர்கள் வேண்டாம் மத்திய அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தல்

பெங்களூரு: ''எனக்கு விசிட்டிங் கார்டு தலைவர்களோ அல்லது லெட்டர் ஹெட் தலைவர்களோ வேண்டாம்; கட்சிக்காக உண்மையாக உழைக்கும் தலைவர்களே தேவை,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். பெங்களூரு சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று மாவட்ட தலைவர்களுடனான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது: கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால், அவர்கள் வெளியேற்றப்பட்டு, வேறொருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். போர்க்கால அடிப்படை அடுத்த இரண்டு ஆண்டுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். வெறும் விசிட்டிங் கார்டு தலைவர்களோ அல்லது லெட்டர் ஹெட் தலைவர்களோ எனக்கு வேண்டாம். அவர்களால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மாவட்ட தலைவர் பதவி அல்லது ஒருங்கிணைப்பு குழு பொறுப்பு என்பது அலங்காரத்துக்கு அல்ல. பதவியில் இருப்பவர்கள், தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். உங்களால் செய்ய முடியவில்லை என்றால், செய்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஆனால், சில இடங்களில் தலைவர்களின் நடத்தையால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கவுரவத்தை விட, கட்சி விசுவாசமே முக்கியம். உங்களுக்கு கிடைக்கும் பதவி நிரந்தரமானது என்று அர்த்தமல்ல. உங்களுக்கு கிடைக்கும் இந்த பொறுப்பு, கட்சிக்கு உழைப்பதற்கான வாய்ப்பு மட்டுமே. அனைவரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது கட்சிக்காக உழைக்க வேண்டும். மாநிலத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் என அனைவரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இந்த அரசு, எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. வாக்குறுதி அளித்து விளம்பரம் மட்டுமே செய்து வருகிறது. பொது பிரச்னை கிராம, தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து அளவில் மக்களின் பொது பிரச்னையை கருத்தில் கொண்டு போராடுங்கள். அரசின் தோல்விகளை மக்களின் மனதில் பதியும் வகையில் அவர்களிடம் எடுத்து கூறுங்கள். நம் கட்சியினர், மக்களுடன் தொடர்பில் இருப்பதும் முக்கியம். வரும் காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக விரும்புவோர், மக்கள் நல போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். முயற்சியோ, வாய்ப்போ இல்லாமல், அதிகாரம் கிடைத்து விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ