கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வாசவி ஜெயந்தி
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை 2 வது கிராஸ் சாலையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று வாசவி ஜெயந்தி விழா நடந்தது. நேற்று காலையில் பல்வேறு பூஜைகள் நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. காலையில் குரு பிரார்த்தனை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், பஞ்ச கவ்ய தேவநந்தி, கலச ஸ்தாபனம், வேத பாராயணம், கன்னிகா பரமேஸ்வரி தேவி ஹோமம், பரிவார தேவர்கள் ஹோமம், பூர்ணாஹுதி, மஹா மங்களாரத்தியுடன் சுமங்கலி பூஜை, பிரசாத வினியோகம் நடந்தது. இரவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேர் பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.