உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விஜயபுரா மாநகராட்சி மேயர் 34 கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்

விஜயபுரா மாநகராட்சி மேயர் 34 கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்

விஜயபுரா : விஜயபுரா மாநகராட்சி, 35 கவுன்சிலர்கள் பலம் கொண்டதாகும். 2022ல் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., 17 வார்டுகள், காங்கிரஸ் 10, ம.ஜ.த., ஒன்று, எம்.ஐ.எம்., கட்சியின் இருவர், ஐந்து சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.அதன்பின் 2024 ஜனவரி 9ம் தேதியன்று, மேயர், துணை மேயர் தேர்தல் நடந்தது. காங்கிரசின் மெஹஜபீன் ஹோர்த்தி மேயராகவும், தினேஷ் ஹள்ளி துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.அதிகமான கவுன்சிலர்கள் வைத்திருந்தும், விஜயபுரா மாநகராட்சியை பா.ஜ.,வால் கைப்பற்ற முடியவில்லை.இந்த நிலையில், மாநகராட்சியின் எந்த ஒரு கவுன்சிலரும், தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் மிர்ஜி மைனுதீன் பீளகி, கலபுரகி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.இதன்படி நடவடிக்கை எடுத்த, பெலகாவியின் மண்டல கமிஷனர் சஞ்சய் ஷெட்டன்னனவர், சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத, 35 கவுன்சிலர்களையும் தகுதி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், விஜயுபுரா மாநகராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை