மேலும் செய்திகள்
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி தங்கவயலில் கொண்டாட்டம்
17-Aug-2025
தங்கவயல்: தங்கவயலில் மழையால் பாதிக்கப்பட்ட கிராம சாலைகளை சீரமைக்க முதல்வர் சித்தராமையா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார். பேத்தமங்களா கிராம பஞ்சாயத்து சாலை, பழைய மதராஸ் சாலை, பேத்தமங்களாவின் டி.கொள்ளஹள்ளி -- திம்மசந்திரா சாலை புதுப்பிக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. அவர் பேசுகையில், ''அண்மையில் பெய்த மழையால் பல கிராம சாலைகள் நாசமாகியுள்ளது. இதனால் கிராம மக்கள், வாகனங்களில் செல்வோர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இது பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலைகளை சீரமைக்க முதல்வர் சித்தராமையா, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். ''இந்த நிதியில், பேத்தமங்களாவின் டி.கொள்ளஹள்ளி -- திம்மசந்திரா சாலை 78 லட்சம் ரூபாய் செலவிலும், பேத்தமங்களா பஸ் நிலையம் -- பழைய மதராஸ் சாலை 22 லட்சம் ரூபாய் செலவிலும் புதுப்பிக்கப்படும். இது போன்று மேலும் பல கிராம சாலைகள் சீரமைக்கப்படும்,'' என்றார். பேத்தமங்களா கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
17-Aug-2025