உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விபத்தில் சிதறிய கோதுமை அள்ளி சென்ற கிராமத்தினர்

 விபத்தில் சிதறிய கோதுமை அள்ளி சென்ற கிராமத்தினர்

துமகூரு: கோதுமை லோடு ஏற்றிச் சென்ற லாரி, விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தது. கொட்டி கிடந்த கோதுமையை, பொது மக்கள் முட்டி மோதி அள்ளிச் சென்றனர். துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், ஹுயிலுதொரே கிராமம் அருகில், நேற்று காலை கோதுமை மூட்டைகள் ஏற்றிய லாரி, ஹுளியாருவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி, கோதுமை லாரி மீது மோதியதில், கோதுமை லாரி கவிழ்ந்தது. இதனால் கோதுமை மூட்டைகள் சாலையில் சிதறின. சில மூட்டைகள் உடைந்து கோதுமை சாலையில் கொட்டியது. இதை கண்ட கிராமத்தினர் பைகள் கொண்டு வந்து, கோதுமையை அள்ளிச் சென்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோதுமை வீணானது. இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிரா போலீசார், கிரேன் உதவியுடன் லாரியை நிமிர்த்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை