உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி கட்டணம் ரத்து

 விநாயகர் சதுர்த்தி விழா அனுமதி கட்டணம் ரத்து

தங்கவயல்: தங்கவயலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட நகராட்சி விதித்திருந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, தங்கவயல் தொகுதி காங் கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார். தங்கவயல் நகர பகுதியில், 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா பந்தல் அமைத்து பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட போலீஸ், பெஸ்காம், தீயணைப்பு படை, நகராட்சி, தாலுகா அலுவலகம் என ஐந்து துறைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதற்கு கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் குழுவினரை அழைத்து, தங்கவயல் தொகுதி காங்கிரஸ்.எம்.எல்.ஏ., ரூபகலா அறிவுரை வழங்கினார். மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும். விதிமுறைகளை மீறக் கூடாது. சட்டம் - ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி பெற, விதிக்கப்பட்ட 1,000 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேனர்கள், பிளக்ஸ்கள் வைக்க அனுமதி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்