உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விஸ்வரூப தரிசனம்: பார்வையாளர்கள் கரகோஷம்

விஸ்வரூப தரிசனம்: பார்வையாளர்கள் கரகோஷம்

மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா கலாசார நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மைசூரு நந்தகுமார் விஷ்ணு பற்றி பாட, ஓவிய கலைஞர் ரகுபதிபட், விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை ஓவியமாக அதே இடத்தில் வரைந்தார். அவர் வரைந்து முடித்ததும், மக்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. இதையடுத்து, பாடகி அனன்யா பட், மிகவும் பிரபலமான சில நாட்டுப்புற பாடல்களை பாடினார். இதை பார்வையாளர்கள் ரசித்து கேட்டனர். தவிர, சந்தன கலதண்டா உறுப்பினர்களின் மெல்லிசை இசை, சாகர் சிங் குழுவினரின் கலாஷிரசாகர் நிகழ்ச்சியை, பரதநாட்டிய வடிவில் வழங்கினர். சாய் சிவ லட்சுமி கேசவ் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி, மைசூரு மஞ்சுநாத், சுமந்த் மஞ்சுநாத், மாலவி மஞ்சுநாத்தின் வயலின் இசை பார்வையாளர்களை கவர்ந்தது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி