உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விவேக் ஸ்மராக ் திறப்பு ஆகஸ்ட் 1ம் தேதி பிரதமர் மோடி மைசூரு வருகை

 விவேக் ஸ்மராக ் திறப்பு ஆகஸ்ட் 1ம் தேதி பிரதமர் மோடி மைசூரு வருகை

மைசூரு: மைசூரில் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில், 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள, 'விவேக் ஸ்மராக்' மையத்தை திறந்து வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, ஆக., 1ல் மைசூரு வருகிறார். சுவாமி விவேகானந்தர், 1892 ல் மைசூரு வந்தார். நாராயண சாஸ்திரி சாலையில் உள்ள நிரஞ்சனா மடத்தில் மூன்று வாரம் தங்கியிருந்தார். சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கியதை நினைவு கூரும் வகையில், ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில், 35 கோடி ரூபாய் மதிப்பில் 'விவேக் ஸ்மராக்' எனும் இளைஞர் கலாசார மையம் கட்டப்பட்டு உள்ளது. இதை திறந்து வைக்க, ஆக., 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இங்கு வருகிறார். பிரதமர் வருகையை ஒட்டி, அவரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், மைசூரு - நஞ்சன்கூடு சாலையில் உள்ள மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் பயணிக்கும் சாலைகள் சீரமைக்கும்படி, மைசூரு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, அவர் பயணிக்க உள்ள பாலகங்காதரநாத சுவாமிகள் சதுக்கம், போகடி வெளிவட்ட சாலை சந்திப்புக்கு இடையே உள்ள சர்வீஸ் சாலையை துாய்மைப்படுத்தும் பணியை, மைசூரு மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சர்வீஸ் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை குவியலை அகற்றி, கழிவுகளை அப்புறப்படுத்த, மண் அள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை