உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் அமைச்சர் லட்சுமி கேட்டது என்ன?

காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் அமைச்சர் லட்சுமி கேட்டது என்ன?

பெங்களூரு: பெங்களூரு வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, சந்தித்து பேசிய, மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்.பெங்களூரு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, நேற்று முன்தினம் மகளிர் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், நேரில் சந்தித்து பேசினார்.கூட்டத்துக்கு பின் லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், ''பெங்களூரு வரும் கட்சியின் தலைவரை, நாங்கள் சந்திப்பது வழக்கம். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அவரை சந்தித்து என் துறையின் பல விஷயங்கள் குறித்தும்; மாநில வளர்ச்சி திட்டங்கள், வாக்குறுதி திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கினேன். கடந்த முறை டில்லி சென்ற போது, அவரை சந்திக்க இயலவில்லை. என் உடல் நிலை குறித்து விசாரித்தார்,'' என்றார்.இவரின் சந்திப்புக்கு பின்னணியில், வேறு விஷயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிடம் சித்தராமையா, சிவகுமார் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம், இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது. தலைமை பொறுப்பு மாறும் போது, அமைச்சரவை மாற்றப்படும். அப்போது, தனக்கு பதவி வழங்குவது குறித்தும், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த தன் மகனுக்கு, எம்.எல்.சி., பதவியோ அல்லது கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.துணை முதல்வர் சிவகுமாரின் விசுவாசியாக இருப்பவர் லட்சுமி ஹெப்பால்கர் இருப்பதால், இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை