உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆபாச வீடியோ காட்டி இம்சித்த கணவரை கொன்ற மனைவி கைது

ஆபாச வீடியோ காட்டி இம்சித்த கணவரை கொன்ற மனைவி கைது

கொப்பால்: தம்பதிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கணவரின் கொலையில் முடிந்தது. இதற்கு ஆபாச வீடியோ காரணம் என, கூறப்படுகிறது. கொப்பால் மாவட்டம், முனிராபாத்தின் நீர்ப்பாசனத்துறை லே - அவுட்டில் வசித்தவர் ரமேஷ், 50. இவர் கே.பி.டி.சி.எல்.,லில் பணியாற்றினார். இவரது மனைவி மஹாதேவி, 45. தம்பதிக்கிடையே அவ்வப்போது சண்டை நடந்தது. நேற்று முன் தினம் இரவும், ஏதோ காரணத்தால் வாக்குவாதம் நடந்தது. அப்போது ரமேஷ், மனைவியை அடித்துள்ளார். கோபம் அடைந்த மஹாதேவி, உலக்கையால் கணவரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷின் மகன் துபாயில் பணியாற்றுகிறார். அங்கிருந்து தாய்க்கு பணத்தை அனுப்புவார்; அதை மஹாதேவி சேமித்து வைத்திருந்தார். இந்த பணம் விஷயத்தில், தம்பதிக்கிடையே வாக்குவாதம் நடந்திருக்கலாம் என, முதலில் கருதப்பட்டது. ஆனால் கொலைக்கு ஆபாச வீடியோ காரணம் என, தகவல் வெளியாகியுள்ளது. ரமேஷுக்கு 50 வயதாகியும், ஆபாச வீடியோ பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதை மனைவியிடம் காண்பித்து, அதே போன்று தன்னுடன் ஒத்துழைக்கும்படி இம்சித்துள்ளார். இந்த காரணத்தால், தினமும் சண்டை நடந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு, பொறுமையிழந்து கணவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மஹாதேவியை, முனிராபாத் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை