உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனைவி கள்ளத்தொடர்பு கணவர் துாக்கிட்டு தற்கொலை

 மனைவி கள்ளத்தொடர்பு கணவர் துாக்கிட்டு தற்கொலை

சிக்கமகளூரு: மனைவியின் பக்கத்து வீட்டு நபருடன், கள்ளத்தொடர்பு வைத்ததுடன், தன் மீது பொய்யான புகார் அளித்ததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார். சிக்கமகளூரு நகரில் வசித்தவர் மனு, 26. ஓட்டுநராக பணியாற்றிய இவர், சகராயபட்டணாவை சேர்ந்த ஹரிணி, 21, என்பவரை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். தம்பதி அன்யோன்யமாகவே இருந்தனர். ஆனால் சமீப நாட்களாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் அசோக் என்பவருடன், ஹரிணி நெருங்கி பழக துவங்கினார். இருவருக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ெமாபைலில் மெசேஜ் அடித்து கொண்டனர். இதையறிந்த மனு, மனைவியை கண்டித்தார். அசோக்குடன் சண்டை போட்டார். ஆனால் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அசோக்குடன் தொடர்பை விட விரும்பாத ஹரிணி, இரண்டு நாட்களுக்கு முன், தன்னை கணவர் தாக்கி சித்ரவதை செய்வதாக, சிக்கமகளூரு ஊரக போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். விசாரணைக்கு மனுவை போலீசார் அழைத்தனர். ஊரார் முன்னிலையில் தன் மரியாதை போய்விட்டது என, மனம் வருந்தினார். இதற்கிடையே நேற்று முன் தினம் இரவு, மனைவி ஹரிணியின் மொபைல் போனுக்கு, அசோக் மெசேஜ்கள் அனுப்பினார். இதை பார்த்த மனு கோபத்துடன், அசோக்கை திட்டினார். அப்போது இவர், 'உன் மனைவியுடன், எனக்கு தொடர்பு இருப்பது உண்மைதான்' என, கூறி அவமதித்தார். இதனால் மனம் நொந்த மனு, கடிதம் எழுதி வைத்து விட்டு, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, சிக்கமகளூரு ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ