உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை

 கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை

மாண்டியா: கணவர் இறந்த துக்கம் தாங்காமல், மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவின், அத்திமாரனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ராஜு, 46. இவரது மனைவி கீதா, 42. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இவர்களின் இளைய மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார். மகனை இழந்த தம்பதி வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜு, நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். நேற்று காலை இறுதி சடங்குகள் நடந்தன. கணவரின் இறுதி சடங்குகளில் பங்கேற்று, வீட்டுக்கு வந்த கீதா, மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் இழப்பை தாங்க முடியாமல், கீதா இந்த முடிவுக்கு வந்துள்ளார். தகவ லறிந்து அங்கு வந்த, கே.ஆர்.பேட். போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ