உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி

கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி

பெலகாவி : கள்ளத்தொடர்புக்கு தடையாக இருந்ததால், கணவரை கள்ளக்காதலன் கொலை செய்வதை லைவ் வீடியோவில் பார்த்து மனைவி ரசித்த தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகாவின் காடிகொப்பா கிராமத்தில் பலோகி கிராமத்தில் வசித்தவர் சிவனகவுடா பாட்டீல், 43. ஏப்ரல் 2ம் தேதி, இவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். தன் கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி ஷைலா, 35, அழுது புரண்டு கதறினார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். சிவனகவுடா பாட்டீலின் மனைவி ஷைலாவின் நடவடிக்கையில், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவரது மொபைல் போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்த விஷயமும் தெரிய வந்தது. எனவே அவரை தீவிரமாக விசாரித்தபோது, அவரே கொலையாளி என்பது அம்பலமானது.இதுகுறித்து போலீசார் கூறியது:கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதே கிராமத்தின் ருத்ரப்பா ஹொசட்டியுடன், ஷைலாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. கணவரின் கண்களில் மண்ணை துாவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தார். இவர்களின் தொடர்பு, ஆறு மாதஙளுக்கு முன்பு, கணவர் சிவனகவுடாவுக்கு தெரிந்தது.மனைவியை கண்டித்து, ஒழுக்கமாக இருக்கும்படி புத்திமதி கூறினார். ஆனால் ஷைலா பொருட்படுத்தவில்லை. ருத்ரப்பா ஹொசட்டியுடன் தொடர்பை விடவில்லை. இதனால் கணவர் கோபமடைந்து எச்சரித்தார். இதனால் கணவரை தீர்த்து கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி திட்டம் தீட்டினார்.அதன்படி ஏப்ரல் 2ம் தேதி, சிவனகவுடா பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை சந்தித்த ருத்ரப்பா ஹொசட்டி, மது குடிக்க வரும்படி, சிவனகவுடாவை அழைத்துச் சென்றார். அளவுக்கு அதிகமான மது குடிக்க வைத்தார்.அதன்பின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார். சிவனகவுடா கொலை செய்யப்படுவதை, அவரது மனைவி லைவ் வீடியோவில் பார்த்து ஆனந்தம் அடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.ஷைலா, ருத்ரப்பா ஹொசட்டி கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி