உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கணவரை கொன்று மலக்குழியில் வீச்சு மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை

கணவரை கொன்று மலக்குழியில் வீச்சு மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை

சாம்ராஜ்நகர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து, தன் கணவரை கொலை செய்து, மலக்குழியில் வீசிய மனைவி உட்பட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, சாம்ராஜ்நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் குன்டிமாளா கிராமத்தில் வசித்தவர் ராஜசேகர், 30. இவரது மனைவி நந்தினி, 27. இதே கிராமத்தை சேர்ந்த தினகர், 32, என்பவருடன் நந்தினிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். தன் கள்ளத்தொடர்பை விடவில்லை. மிளகாய் பொடி கடந்த 2021ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி இரவு, ராஜசேகர் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அப்போது, நந்தினி, தினகரை வீட்டுக்கு வரவழைத்தார். இருவரும் உல்லாசமாக இருந்தனர். வெளியே சென்றிருந்த ராஜசேகர், திடீரென வீட்டுக்கு வந்தார். இருவரையும் பார்த்து கடும் கோபமடைந்து திட்டினார். இவரை வெளியே விட்டால், ஊராருக்கு விஷயம் தெரிந்துவிடும் என, நினைத்து, நந்தினியும், அவரது கள்ளக்காதலன் தினகரும் சேர்ந்து ராஜசேகரின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி, கட்டையால் அவரது மண்டையில் தாக்கினர். மயக்கம் அடைந்த அவரை, வீட்டின் பின்புறம் இருந்த மலக்குழியில் தலைகீழாக போட்டனர். மண்ணை போட்டு மூடினர். மறுநாள் வீட்டுக்கு வந்த மாமனார், மாமியார், தங்கள் மகன் ராஜசேகரை காணாமல் மருமகளிடம் கேட்டனர். பணிக்கு சென்றவர், வீட்டுக்கு வரவில்லை என, நாடகமாடினார். துர்நாற்றம் இரண்டு நாட்களாகியும் மகன் வராததால், பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் தேடி வந்தனர். இதற்கிடையில் வீட்டின் பின்புறம் இருந்த மலக்குழியில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த தந்தை, போலீசாரிடம் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், கிராமத்தினர் முன்னிலையில் மலக்குழியை தோண்டிய பார்த்தபோது, ராஜசேகரின் உடல் இருப்பது தெரிந்தது. விசாரணை நடத்தியபோது, நந்தினியின் கள்ளத்தொடர்பு அம்பலமானது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தியபோது, கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். இவரையும், இவரது கள்ளக்காதலர் தினகரையும் கைது செய்தனர். விசாரணையை முடித்து, சாம்ராஜ்நகர் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில், நந்தினி, தினகருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீகாந்த் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை