மேலும் செய்திகள்
காய்கறி வரத்து குறைவு:விலை ‘கிடு கிடு’ உயர்வு
02-Jul-2026
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் பண்டிப்பூர் - கெக்கனஹள்ளா வனப்பகுதி சாலையில், நேற்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை, தும்பிக்கையால் ஒரு கார் மீது தாக்கியது. காரில் இருந்தவர்கள் கீழே இறங்காததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பண்டிப்பூர் வனப்பகுதி சாலையில், காய்கறிகள் ஏற்றப்பட்ட லாரிகள் அதிகமாக செல்கின்றன. இதனால் காட்டு யானை ஒன்று, காய்கறி லாரிகளை வழிமறித்து நிறுத்தி, காய்கறிகளை தின்ற பின்னரே, அங்கிருந்து செல்லும். சில நாட்களாக இந்த யானை, சாலைக்கு வராததால், காய்கறி லாரி ஓட்டுநர்கள் நிம்மதிஅடைந்தனர். நேற்று மீண்டும் சாலைக்கு வந்த, 'காய்கறி ராஜா' யானை, வாகன பயணியரை அச்சுறுத்தியது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
02-Jul-2026