உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்?

காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்?

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் விரைவில் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.கர்நாடக காங்கிரஸ் தலைவராக, 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை சிவகுமார் உள்ளார். அவரை மாற்றிவிட்டு புதியவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று, கட்சியின் மூத்த தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.குறிப்பாக முதல்வர் சித்தராமையா அணியில் அடையாளம் காணப்படும் மூத்த அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர், சிவகுமாரை மாற்றுவதில் மும்முரம் காட்டுகின்றனர்.இந்நிலையில் மூன்று நாட்கள் பயணமாக டில்லி சென்ற சித்தராமையா, அமைச்சரவை, மாநில தலைவர் மாற்றங்கள் குறித்து, மேலிட தலைவர்களிடம் பேசினார். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியானது.இதற்கிடையில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று கூறுகையில், “மாநில தலைவர் மாற்றம் குறித்து கூடிய விரைவில் தகவல் கிடைக்கும். தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இருக்கிறேன்,” என கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல், ''தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இருப்பதாக, சதீஷ் ஜார்கிஹோளி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்,'' என்றார்.இதனால் விரைவில் சிவகுமார் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ