உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி?

 சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி?

பெங்களூரு: ''பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வேண்டும்,'' என்று, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கூட்ட நெரிசலில், 11 பேர் இறந்ததால், சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தாமல் நிறுத்தி வைப்பது தீர்வாகாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இங்கு மீண்டும் போட்டி நடக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். கூட்ட நெரிசல் துயரம் நடந்திருக்க கூடாது.கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க புதிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான குழு, சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டியை நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்வர். நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் பரிந்துரைகள்படி, கிரிக்கெட் போட்டியை நடத்தினால் அனுமதி அளிக்கப்படும் என்று அரசு கூறி உள்ளது. கெங்கேரி அருகே சிக்கனஹள்ளியில் கல் குவாரியில் வெடி வைத்து பாறைகளை தகர்த்த போது, கர்ப்பிணி சிறுத்தை இறந்தது வேதனை அளிக்கிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க, வனத்துறை கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ