உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / என் மகனை அரசு திருப்பி தருமா?

என் மகனை அரசு திருப்பி தருமா?

 கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மனோஜின் தந்தை தேவராஜ் நேற்று கூறுகையில், ''அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசிற்கு, நான் 50 லட்சம் ரூபாய் தருகிறேன். என் மகனை அரசு திருப்பி தருமா? ஒரே மகனை இழந்துவிட்டேன். தற்போது, நான் யாரை, மகனென்று அழைப்பது?'' என்றார் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரஜ்வல். இவர், இறப்பதற்கு முன்பு, மூன்று பேர் உயிரை காப்பாற்றினார். இவரது பாட்டி இறந்த பத்து நாட்களுக்குள், பேரனும் இறந்துவிட்டதால், வீட்டில் சோகம் அதிகமாக காணப்பட்டது சம்பவம் குறித்து விசாரிக்கும்படி, முதல்வர், துணை முதல்வர், கே.எஸ்.சி.ஏ., அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் ஆர்.சி.பி., என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விளையாட்டு வீரர்களுக்கு, 'அரசு செலவில் ஏன் பாராட்டு விழா நடந்தது?' என வக்கீல் ரங்கநாத் ரெட்டி கேள்வி எழுப்பினார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் ஷோபா நலம் விசாரித்தார். “'புஷ்பா' பட ரிலீசின்போது நடந்த கூட்ட நெரிசலில் ஏற்பட்ட ரசிகர் உயிரிழப்பில், நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். அது போல, தற்போது யார் கைது செய்யப்படுவர்?” என கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை