உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாந்திரீகம்?

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாந்திரீகம்?

ராய்ச்சூர்: பொதுப்பணித்துறை உதவி செயல் நிர்வாக அதிகாரியின் அலுவலக வளாகத்தில் மாந்த்ரீகம் செய்யப்பட்டதால் பதற்ற நிலை உருவானது. ராய்ச்சூர் நகரில் பொதுப்பணித்துறை உதவி செயல் நிர்வாக அதிகாரி அலுவலகம் உள்ளது. அலுவலக கழிப்பறைகளில் சரியாக தண்ணீர் வரவில்லை. எனவே தொட்டியில் அடைப்பு உள்ளதா என்பதை பார்க்க, கட்டடத்தின் மேற்பகுதிக்கு ஊழியர்கள் சென்றனர். தொட்டியின் வால்வு, பைப்புகளை பார்த்தனர். அப்போது அலுவலக வளாகத்தில் இருந்த புளியமரத்தில், இரண்டு கருப்பு நிற பொம்மைகள் கட்டப்பட்டிருந்ததை பார்த்தனர். மனித முகம் போன்றிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பொம்மைகளை போட்டோ எடுத்து, உயர் அதிகாரிகளிடம் காட்டினர். அதன் பின் பொம்மைகளை, ஊழியர்கள் கீழே எடுத்து வந்து, தீ வைத்து எரித்தனர். கோவிலுக்கு சென்று பூஜை செய்தனர். இச்சம்பவத்தால் அலுவலகத்தில், பதற்றம் நிலவியது. இந்த அலுவலகத்தில், பல்வேறு பணிகளுக்கு பில் தொகை நிலுவையிலும், கோப்புகள் நகர்த்தப்படாமல் தேங்கியுள்ளதாக, குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், எரிச்சல் அடைந்த பொது மக்களோ அல்லது ஒப்பந்ததாரர்களோ விரைவில் பில் தொகை கிடைக்க வேண்டும், கோப்புகள் நகர்த்தப்பட வேண்டும் என, மாந்த்ரீகம் செய்திருக்கலாம் என, ஊழியர் கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !