குடும்பத்தை தீர்த்து கட்ட முயற்சித்த பெண் கைது
ஹாசன்: தன் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பர் என கருதி, மொத்த குடும்பத்தையும் தீர்த்துக் கட்ட முயற்சித்த பெண் கைது செய்யப்பட்டார்.ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின் கெரளார் கிராமத்தில் வசிப்பவர் கஜேந்திரா, 36. இவரது மனைவி சைத்ரா, 33. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சமீப காலமாக சைத்ராவின் நடத்தை மாறியது. இவருக்கு அறிமுகமான புனித் என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இதையறிந்த கஜேந்திரா, மனைவியை கண்டித்தார். இவ்விஷயத்தை தன் பெற்றோரிடமும் தெரிவித்தார். மருமகளுக்கு அவர்கள் புத்திமதி கூறி, ஒழுங்காக இருக்கும்படி எச்சரித்தனர். அதன்பின் சில நாட்கள், சைத்ரா கணவரிடம் நல்ல முறையில் நடந்து கொண்டார்.அதன்பின், சைத்ராவுக்கு, அதே கிராமத்தில் வசிக்கும் சிவு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் மானம் போகும் என கருதி, தன் கணவர், இரண்டு பிள்ளைகள், மாமனார், மாமியாருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து, கொலை செய்ய முயற்சித்தார்.இதையறிந்த கஜேந்திரா, விஷம் கலந்த உணவை குடும்பத்தினர் சாப்பிடாமல் காப்பாற்றினார்.இனியும் மனைவியை விட்டு வைத்தால், மீண்டும் கொலை முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், பேலுார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் நேற்று காலை கிராமத்துக்கு வந்து, சைத்ராவையும், அவரது கள்ளக்காதலர் சிவுவையும் கைது செய்தனர்.