உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குப்பை பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாப பலி

குப்பை பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பரிதாப பலி

பெங்களூரு: பெங்களூரு ஊரக மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் எம்.எஸ்.ஜி.பி., எனும் கழிவு மேலாண்மை மறுசுழற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு காடதிப்பூர் கிராமத்தை சேர்ந்த அரசம்மா, 45, மூன்று நான்கு ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை இந்த மையத்தில் பிளாஸ்டிக் உட்பட குப்பைகளை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக அரசம்மா சிக்கிக் கொண்டார். இதில் அவரது கைகளும், கால்களும் துண்டாகின. அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள், அதிர்ச்சியில் கூச்சலிட்டு கதறி அழுதனர். தொட்டபெலவங்களா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், அரசம்மா உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை