வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவசர காலத்தில் உதவிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
பெங்களூரு: பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் குழந்தை பெற்றெடுத்தார். பெங்களூரு, பையப்பனஹள்ளியில் விஸ்வேஸ்வரய்யா ரயில்வே முனையம் உள்ளது. இங்கு பெங்களூரு - ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஹட்டியா செல்வதற்காக, நேற்று முன் தினம் காலை அர்ச்சனா குமாரி, 23, என்பவர் பிளாட்பாரத்தில் காத்திருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதை கண்ட ரயில்வே ஊழியர், சுரேஷ்பாபு, கர்ப்பிணிக்கு மருத்துவ உதவிக்காக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே பாதுகாப்பு படை பெண் ஊழியர்கள், அர்ச்சனா குமாரியை ரயில் நிலையத்துக்குள் பாதுகாப்பான, தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின், தாயும், சேயும் சி.வி.ராமன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தன் மனைவிக்கு சரியான நேரத்தில் பிரசவம் பார்க்க உதவிய ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு அர்ச்சனா குமாரியின் கணவர் நிஷாந்த் குமார் நன்றி கூறினார்.
அவசர காலத்தில் உதவிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்