உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சக்தி திட்டத்தில் 2 ஆண்டுகளில் 500 கோடி முறை பயணித்த பெண்கள்

சக்தி திட்டத்தில் 2 ஆண்டுகளில் 500 கோடி முறை பயணித்த பெண்கள்

பெங்களூரு: “காங்கிரஸ் அரசின், 'சக்தி' திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்த பெண்களின் எண்ணிக்கை, 500 கோடியை எட்டுகிறது,” என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:'சக்தி' புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. திட்டம் செயல்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வரை, 493 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., உட்பட, நான்கு போக்குவரத்து கழக பஸ்களில், ஒரு ரூபாயும் கொடுக்காமல் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.நான்கு போக்குவரத்துக் கழக பஸ்களில், தினமும் 70 முதல், 75 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் 500 கோடியை எட்டும். இவர்கள் பயணம் செய்த டிக்கெட் மதிப்பு 12,511 கோடி ரூபாய். பெண்களின் எண்ணிக்கை 500 கோடியை எட்டுவதை, சிறப்பாக கொண்டாட போக்குவரத்துத் துறை தயாராகி வருகிறது.குறிப்பாக 500வது கோடி டிக்கெட் பெறும் பெண்ணுக்கு, அதிர்ஷ்ட பரிசு காத்திருக்கிறது.அனைத்து மாவட்டம், தாலுகாக்களிலும் போக்குவரத்துத் துறை சார்பில், 'சக்தியோத்சவம்' நடத்தப்படும். 'சக்தி' திட்டத்தால் திருத்தலங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஹிந்து அற நிலையத்துறை கருவூலம் நிரம்புகிறது. காங்கிரஸ் அரசு இருக்கும் வரை, 'சக்தி' திட்டமும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை