உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மந்த்ராலயாவில் எடியூரப்பா

மந்த்ராலயாவில் எடியூரப்பா

மந்த்ராலயாவில் எடியூரப்பா

முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் குடும்பத்துடன் மந்த்ராலயா சென்று, ராகவேந்திர சுவாமியை தரிசனம் செய்தார். மடாதிபதியிடம் தன் பேரனின் திருமண அழைப்பிதழ் கொடுத்து, அழைப்பு விடுத்தார்.ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவின் மகனுக்கு, திருமணம் நடக்க உள்ளது. உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என, பலருக்கும் திருமண அழைப்பிதழ் அளிக்கின்றனர்.ஆந்திராவில் உள்ள, பிரசித்தி பெற்ற மந்த்ராலயா மடத்துக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் குடும்பத்துடன் நேற்று காலை சென்றிருந்தார். ராகவேந்திரரை தரிசனம் செய்தனர். மஞ்சாலம்மா தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. குடும்பத்தில் நடக்கும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்தனர்.அதன்பின் மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகளின் ஆசி பெற்றார். பேரனின் திருமண அழைப்பிதழ் கொடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். மடாதிபதியும், மந்திர அட்சதை வழங்கி ஆசி கூறினார்.

மந்த்ராலயாவில் எடியூரப்பா

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ