உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கேழ்வரகிலும் செய்யலாம் புலாவ்!

கேழ்வரகிலும் செய்யலாம் புலாவ்!

– நமது நிருபர் – கேழ்வரகில் பல விதமான சத்துக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. களி உருண்டை தயாரிக்க பயன்படுத்தும் கேழ்வரகில், சுவையான புலாவ் செய்யலாம்.

செய்முறை:

முதலில் கேழ்வரகை நன்றாக கழுவி, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். அடுப்பில் குக்கர் வைத்து நெய் ஊற்றவும். சூடானதும் சீரகத்தை போடவும். அதன் பின் வேர்க்கடலையை போட்டு வறுக்கவும். இதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும், மஞ்சள் துாள், மிளகாய் துாள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின், ஊற வைத்துள்ள கேழ்வரகை வடிகட்டி, குக்கரில் போடவும். இதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பின் இதன் மீது நறுக்கிய கொத்துமல்லி தழையை துாவினால், சுவையான கேழ்வரகு புலாவ் தயார். சுவையாக இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !