உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காதலியின் திருமண அழைப்பிதழ் விரக்தியில் வாலிபர் தற்கொலை

காதலியின் திருமண அழைப்பிதழ் விரக்தியில் வாலிபர் தற்கொலை

குடகு: காதலியின் திருமண அழைப்பிதழை பார்த்து, மனம் நொந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், பெட்டிங்காலாவின் பெக்கரி கிராமத்தில் வசிக்கும் காளய்யாவுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துள்ளார். மகன் சுமந்த், 28, என்பவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர், இதே கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை, ஒரு தலையாக காதலித்தார். தன் காதலை பல முறை கூறியும், இளம்பெண் நிராகரித்தார். அப்போதும் விடாமல் பின் தொடர்ந்ததால், அப்பெண் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும், சுமந்தை அழைத்து எச்சரித்தனர். இச்சம்பவத்துக்கு பின், அவர் பெங்களூரு சென்று, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், வேலையை விட்டு விட்டு, சொந்த ஊருக்கு வந்து, தனியார் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது; அழைப்பிதழ் வந்தது. இதை பார்த்த சுமந்த், மனம் வருந்தினார். அக்டோபர் 18ம் தேதி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மடிகேரி மருத்துவமனையில் சேர்த்தனர். கூடுதல் சிகிச்சைக்காக மங்களூரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ