உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞர்

கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட இளைஞர்

தட்சிண கன்னடா: வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை, 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தை பார்த்த இளைஞர்கள், கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர். தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாலை சேர்ந்தவர் குருபிரசாத். கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் வீட்டின் முன் உள்ள வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரது இரண்டரை வயது பெண் குழந்தை ஹிமானியும் விளையாடிக் கொண்டிருந்தது. வீட்டின் அருகில் உள்ள திறந்தவெளி கிணற்றில் திடீரென குழந்தை விழுந்தது. அதிர்ச்சியடைந்து குடும்பத்தினர் கூச்சலிட்டனர். குழந்தையின் தாய்மாமா ஜீவன் மீட்க முயற்சித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால், இடுப்பில் கயிறு கட்டி கீழே இறங்கினார். மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையின் கையை பிடித்து மேலே இழுக்க முடியவில்லை. இவர்களின் கூச்சலை பார்த்த, அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் வந்தனர். விவேக் என்ற இளைஞர் ஜீவன் கட்டியிருந்த கயிற்றை பிடித்தபடி கிணற்றில் இறங்கினார். தண்ணீரில் தத்தளித்த குழந்தையை பத்திரமாக மேலே துாக்கி வந்தார். மகளை மீட்டு தந்த இளைஞரை பெற்றோரும், அப்பகுதியினரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 29_DMR_0001 கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஹிமானி. படம்: விவேக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஹிமானி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை