காவிரி ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
மாண்டியா: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண், காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின், பிரசாதஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சிஞ்சனா, 24. இவர் எம்.சி.ஏ., பட்டதாரி. ஆரோக்கியமாக இருந்த அவரது உடல் நிலை சில நாட்களாக பாதிக்கப்பட்டது. இதனால் மன அமைதியிழந்து காணப்பட்டார்.சிஞ்சனா நேற்று முன் தினம் மாலை, திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். பஸ்சில் பயணம் செய்து சென்னப்பட்டணா வழியாக, மாண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வந்தார். அங்கும், இங்கும் நடமாடினார். இரவு 8:00 மணியளவில், காவிரி ஆற்றுப் பாலத்துக்கு வந்த அவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன்பு, தன் கைப்பையை பாலத்தின் மீது வைத்திருந்தார். இதை கண்ட சிலர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த ஸ்ரீரங்கப்பட்டணா போலீசார், பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து, அவரது பெயர், முகவரியை தெரிந்து குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். ஆற்றில் அவரது உடலை தேடுகின்றனர்.