உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கைவிட்ட கள்ளக்காதலன் போலீசில் இளம்பெண் புகார்

கைவிட்ட கள்ளக்காதலன் போலீசில் இளம்பெண் புகார்

தாவணகெரே: ஹூப்பள்ளியை சேர்ந்தவர் நவீன், 30. இவர் மூன்று ஆண்டுகளுக்கு பணி நிமித்தமாக, தாவணகெரேவுக்கு வந்தார். நாளிதழ்கள் கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராக பணியாற்றினார். அவருக்கு ஹரப்பனஹள்ளியை சேர்ந்த, 30 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இப்பெண்ணுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தன் குழந்தைகளுடன், அப்பெண் நவீனுடன் வந்து விட்டார். இருவரும் கணவன், மனைவி போன்று வாழ்ந்தனர். இதற்கிடையே நவீனுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் வேலை கிடைத்தது. அரசு வேலை கிடைத்த பின், அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அப்பெண்ணை விட்டு விலக துவங்கினார். அந்த பெண்ணிடம் இருந்து பெற்றிருந்த பணம், தங்க நகைகளை திருப்பித் தரவில்லை. தன்னை விட்டுச் செல்லும்படி விரட்டினார். இதே காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்தது. நேற்று முன்தினம் மாலை, இருவரும் தாவணகெரேவில் உள்ள பிரபலமான பூங்காவுக்கு வந்தனர். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் தாக்கிக் கொண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நவீனின் செயலால், மனம் வருந்திய பெண், தாவணகெரே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர். கணவரை விட்டு, யாரையோ நம்பி வந்த பெண், இப்போது நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ