உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாற்று திறனாளியாக நடித்து திருட்டு இளைஞர் கைது

 மாற்று திறனாளியாக நடித்து திருட்டு இளைஞர் கைது

பெங்களூரு: கால் இல்லாதவர் போல நடித்தவர் போலீசில் சிக்கினார். பெங்களூரு, பேட்ராயனபுராவின், ஐ.டி.ஐ., லே - அவுட்டில், சில நாட்களாக மாற்றுத்திறனாளி இளைஞர் நடமாடினார். தனக்கு இரண்டு கால்களும் செயலிழந்துள்ளன. ஆதரவு காட்ட யாரும் இல்லை என, கூறி பிச்சை எடுத்தார். இவரை கண்டு பரிதாபமடைந்த பலரும் உணவும், பணமும் கொடுத்தனர். ஐ.டி.ஐ., லே - அவுட்டில், சில நாட்களுக்கு முன் விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை திருடினார். போனை பறிகொடுத்த கடை உரிமையாளர் கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்த போது மாற்றுத்திறனாளி இளைஞரே, போனை திருடியது தெரிந்தது. அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர், மருத்துவ ஆய்வில் மாற்றுத்திறனாளி அல்ல என்பதும் தெரிய வந்தது. கைதான அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !