திருடன் என தவறாக கருதிய மக்கள் இளைஞர் மீது தாக்குதல்
பெங்களூரு: பெங்களூரு நகரின் ஜே.ஜே.நகரில் வசிக்கும் ஷாஹித், 19, பழ வியாபாரம் செய்கிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன், இரவு 7:00 மணிக்கு கே.ஆர்.மார்க்கெட்டின் ஆர்.டி.வீதியில் தன் நண்பர் பர்தின் பாஷாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில், மொபைல் போனில் பேசியபடி செ ன்ற பாதசாரி மீது, பைக் உராய்ந்ததில் அவரது மொபைல் போன் கீழே விழுந்த து. இதை பார்த்த ஷாஹித், கீழே விழுந்த மொபைல் போனை எடுத்து கொடுக்க முற்பட்டார். ஆனால், இவரை மொபைல் போன் திருட வந்ததாக, தவறாக நினைத்த பாதசாரி, கூச்சலிட்டார். அப்போது பொதுமக்களும் ஷாஹிதை விரட்டி வந்து கண்மூடித்தனமாக தாக்கினர். அவரது நண்பரையும் தாக்கினர். இதில் ஷாஹித் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது குணமடைந்து வரும் அவர், நடந்த சம்பவம் குறித்து. கே.ஆர்.மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.