உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமி பலாத்கார முயற்சி வாலிபருக்கு சரமாரி அடி, உதை

சிறுமி பலாத்கார முயற்சி வாலிபருக்கு சரமாரி அடி, உதை

ஹூப்பள்ளி:'ஹிந்து மதத்தை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்ய முயற்சித்த வேற்று மத வாலிபரை, பொது மக்கள் பிடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஹூப்பள்ளி நகரின் கோகுல் சாலையில் வசிப்பவர் சையத் ரஹனா, 28. இவர் இதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் அறிமுகமானார். தன் மதத்தை மறைத்து, தன் பெயர் ரமேஷ் என அறிமுகம் செய்து கொண்டார். அவ்வப்போது சிறுமியை சந்தித்துப் பேசி, நெருக்கமானார். நேற்று காலை பேசலாம் என, கூறி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் சிறுமியை காப்பாற்றினர். சையத் ரஹனாவை பிடித்து, உதைத்தனர். அவருடைய மொபைல் போனை பார்த்தபோது, பல இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் படங்கள், வீடியோக்கள் இருந்தன. அவரது பெயர் ரமேஷ் அல்ல, சையத் ரஹனா என்பதும் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. தவறை ஒப்புக்கொண்ட சையத் ரஹனா, “இனி இப்படி செய்யமாட்டேன்,” என, உறுதி அளித்தார். அவரை கோகுல் சாலை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை