24வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
மாதநாயக்கனஹள்ளி: ஆந்திராவை சேர்ந்தவர் லோகேஷ் பவன் கிருஷ்ணா, 26. பெங்களூரு எலஹங்கா பகுதியில் உள்ள மாலில், எலக்ட்ரீஷியனாக வேலை செய்தார். லோகேஷின் சகோதரி, பெங்களூரு ரூரல் சிக்கபிதரஹள்ளுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசிக்கிறார். நேற்று காலை சகோதரி வீட்டிற்கு லோகேஷ் சென்றார். அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடிக்கு சென்ற அவர், மாடியில் இருந்து கீழே குதித்தார். ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.