மெட்ரோ ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
பெங்களூரு: மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை வாலிபர் செய்து கொண்டார். பெங்களூரு பொம்மனஹள்ளி - ஆர்.வி., சாலை மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில், நேற்று மாலை 5:50 மணியளவில், ஹூஸ்கூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் வருவதை பார்த்த 35 வயதுள்ள ஒரு வாலிபர், மெட்ரோ ரயில் பாதையில் குதித்தார். இதை பார்த்த அங்கிருந்த மெட்ரோ ஊழியர், உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்தார். ஆனாலும், வாலிபர் ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவ்வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வகையில், மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஹூஸ்கூர் மெட்ரோ நிலையத்தில் இருந்து பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி வரை இரு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரத்தில் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் துவங்கியது.