உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

சிக்கபல்லாபூர்: காதலி அலட்சியப்படுத்தியதால், மனம் நொந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சிக்கபல்லாபூர் நகரின், பாலகுன்டஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சிருத் குமார், 18. பத்தாம் வகுப்பில் மூன்று முறை தோல்வி அடைந்த அவர் விவசாயம் செய்து வந்தார். இவர், 17 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக ஊரை சுற்றினர். ஆனால் அந்த பெண், திடீரென வேறு இளைஞரை காதலிக்க துவங்கினார். சிருத் குமாரை ஒதுக்கினார். தன்னை காதலி அலட்சியப்படுத்தியதால், மனம் நொந்த சிருத் குமார் நேற்று முன் தினம் ஜக்கலமடகு அணை அருகில் உள்ள நிலத்தில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆரம்பத்தில் இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியாமல், பெற்றோரும், உறவினர்களும் குழம்பினர். அவரது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை பார்த்தபோது, அவர் இறப்பதற்கு முன்பு, காதலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை பதிவேற்றியிருந்தார். அதன்பின்னரே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ