யு - டியூபர ் சமீர் ஆஜர் 2வது நாளாக விசாரணை
தட்சிண கன்னடா: தர்மஸ்தலா விவகாரத்தில் இரண்டாவது நாளாக நேற்று எஸ்.ஐ.டி., விசாரணையில், யு - டியூபர் சமீர் வாக்குமூலம் அளித்தார். தர்மஸ்தலா விவகாரத்தில் யு - டியூபர் சமீர், தனது சேனலில் தர்மஸ்தலா விவகாரம் குறித்த ஆட்சேபனைக்கு உரிய வகையில் செய்திகள் வெளியிட்டார். இதை கண்டித்து, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைதுக்கு பயந்த சமீர், முன்ஜாமின் பெற்றார். இதையடுத்து, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி நேற்று முன்தினம் நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இரண்டாவது நாளாக நேற்று மதியம் 12:15 மணிக்கு பெல்தங்கடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில், தனது வக்கீலுடன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது மீண்டும் அவரின் குரல் பரிசோதனை எடுக்கப்பட்டது. அவரின் மடிக்கணினி தொடர்பாக தொழில்நுட்ப தகவல்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.