உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வணிகத்திலிருந்து வெளியேறிய 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

வணிகத்திலிருந்து வெளியேறிய 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

மும்பை: கிட்டத்தட்ட 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக கூறி தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: 'டாடா கேப்பிட்டல் பைனான்சியல் சர்வீசஸ்' உள்ளிட்ட 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் பதிவுச் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இதில், ஒன்பது வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஒருங்கிணைப்பு, இணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால், சட்டப்பூர்வ நிறுவனங்களாக தொடர்வதை நிறுத்திக் கொண்டன. இதையடுத்து, தற்போது ஆறு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி வணிகத்தில் இருந்து வெளியேறி, தங்களது பதிவு சான்றிதழ்களை ஒப்படைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட, தங்களது பதிவு சான்றிதழ்களை திருப்பி அளித்துள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

உலகநாதன்
மே 11, 2024 15:47

இவிங்களுக்கு பதில் ரிசர்வ் வங்கியே வணிகத்தில் ஈடுபட்டு பட்டையக்.கிளப்பும் போலிருக்கு. சூப்பர்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை