உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பஜாஜ் ஹவுசிங் ரூ.7-,000 கோடி ஐ.பி.ஓ.,

பஜாஜ் ஹவுசிங் ரூ.7-,000 கோடி ஐ.பி.ஓ.,

புதுடில்லி:'பஜாஜ் பைனான்ஸ்' நிறுவனத்தின் வீட்டுவசதி பிரிவான, 'பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ்' புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 7,000 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 4,000 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் பங்கு வெளியீடு வாயிலாக 3,000 கோடி ரூபாயும் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்; செப்டம்பர் 16ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் பட்டியலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நிறுவனத்தின் வருவாய் 2,209 கோடி ரூபாயாகவும்; வரிக்கு பிந்தைய லாபம் 483 கோடி ரூபாயாகவும் இருந்தது.புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வீடு, அலுவலக பணியிடங்கள் சார்ந்த தேவைகளுக்கு கடன் வழங்கி வருகிறது. மேலும், கட்டுமானத் துறை நிறுவனங்களுக்கும் கடனுதவி வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை