உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / நிதி மோசடி செய்தவர்கள் பட்டியல் தயார் இனி, எந்த வங்கியிலும் வாலாட்ட முடியாது

நிதி மோசடி செய்தவர்கள் பட்டியல் தயார் இனி, எந்த வங்கியிலும் வாலாட்ட முடியாது

புதுடில்லி:நிதி மோசடியில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் குறித்த விபரங்களை வங்கிகள் தொகுத்து, புதிய பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளன. இதில், பல துறைகளை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பெயர்கள், விபரங்கள் இடம்பெற்று உள்ளன.இது குறித்து வங்கி உயரதிகாரிகள் கூறியதாவது:கடந்த மாதம் நடைபெற்ற வங்கி மற்றும் நிதி மோசடிகள் தடுப்புக்கான ஆலோசனை வாரிய கூட்டத்தில், மோசடியாளர்கள் குறித்த ஒருங்கிணைப்பு பட்டியல் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, தொகுக்கப்பட்ட பட்டியலை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் முன்னர், ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், தொடர்ந்து தகவல்களை அதில் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டன.கடந்த ஜூலை 15ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட மோசடி வகைகளின் வழிகாட்டுதல்களை சேர்த்தால், மோசடி பேர்வழிகள் பட்டியல் இன்னமும் நீண்டு கொண்டே செல்லும். வங்கி அலுவலர்கள், தொடர்ச்சியாக எச்சரிக்கை பட்டியலை சரிபார்ப்பதில்லை. இது மோசடி நிறுவனங்கள் மீண்டும் நிதி அமைப்பிற்குள் வருவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, தங்கள் கிளைகளுக்கு வங்கிகள் உள்சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.மோசடியாளர்களின் மீது வங்கிகள் தனிப்பட்ட நடவடிக்கை எடுப்பதால், வேறு வங்கிகளில் தொடர்ந்து கடன் பெற்று மோசடி செய்ய வாய்ப்பாகிறது. இந்த பட்டியல் வாயிலாக, மோசடியாளர்களின் தொடர்புகளை, வங்கிகள் களைய முடியும்.

வங்கி மோசடிகள்

கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடி தொடர்பான வழக்குகள் 4 மடங்கு அதிகரித்து உள்ளது. வழக்குகள் அதிகரித்த போதிலும், மோசடி நடைபெற்ற தொகை பெருமளவு குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
செப் 07, 2024 14:18

வங்கி அதிகாரிகள் உதவியின்றி நிதி மோசடி நடக்க வாய்ப்பில்லை எனவே உடனடியாக மோசடியில் உதவிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் அவர்கள் சொத்துக்களை அவரும் அவரது வாரிசுகள் பினாமிகள் என எவரும் எந்நாளும் அனுபவிக்க முடியாதபடி பறிமுதல் செய்து மோசடிப் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் அவசியயமானால் அவர்களது உறவினர்களையும் விசாரிக்கலாம் இதனால் அச்சமடையும் அவர்களது உறவினர்களது உதவி இவருக்கு மறுக்கப்படும் சில நேரம் சில அப்பாவிகளும் அரசியல்வியாதிகளின் கைக்கூலிகளும் கூட தண்டிக்கப்படலாம் பரவாயில்லை ஒரு குற்றவாளியாவது தண்டிக்கப்படுவானாயின் ஆயிரம் நிரபராதிகள் தியாகம் செய்யலாம் குற்றம் செய்பவனைவிட குற்றம் செய்ய உதவுபவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை