உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / 7 விருதுகள் வென்ற சிட்டி யூனியன் வங்கி

7 விருதுகள் வென்ற சிட்டி யூனியன் வங்கி

சென்னை:இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், சிட்டி யூனியன் வங்கி மொத்தம் ஏழு விருதுகளை வென்று உள்ளது.மும்பையில் கடந்த 9ம் தேதி, வங்கி தொழில்நுட்பத்துக்கான நிகழ்ச்சி ஒன்று இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில், சிறந்த தொழில்நுட்பங்களை வழங்கும் வங்கிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஏழு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.இந்த ஏழு பிரிவுகளிலும், சிட்டி யூனியன் வங்கி விருதுகளை வென்றுள்ளது. அதன்படி, சிறந்த ஏ.ஐ., மற்றும் எம்.எல்., வங்கி, சிறந்த நிதி தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் பேமென்ட் குறியீடு பயன்பாடு மற்றும் சிறந்த நிதி உள்ளடக்கம் ஆகிய பிரிவுகளில் முதற்கட்ட விருதுகளை வென்றுள்ளது.சிறந்த டிஜிட்டல் செயல்பாடு, சிறந்த தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை மற்றும் சிறந்த தொழில்நுட்ப திறன் ஆகிய பிரிவுகளில் இரண்டாம் கட்ட விருதுகளை வென்றுள்ளது. மேலும் சிறப்பு பிரிவில், சிறந்த தொழில்நுட்ப வங்கி என்ற விருதையும் சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.இந்த விருதுகளை, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ரபி சங்கர், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி காமகோடியிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ