10வது முறையாக வட்டியில் மாற்றமில்லை 6.50 சதவீதமாக தொடரும் என அறிவிப்பு
மும்பை:வங்கிகளுக்கு வழங்கக்கூடிய குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என தொடர்ந்து 10வது முறையாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியின் ஏற்ற இறக்கத்தை தீர்மானிக்கக்கூடியது இந்த ரெப்போ வட்டி விகிதம். நேற்று நிறைவடைந்த ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் பணக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: மாற்றி அமைக்கப்பட்ட பணக்கொள்கை குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. அதில் புதிய உறுப்பினர்கள் ராம் சிங், சவுகதா பட்டாச்சார்யா, நாகேஷ் குமார் பங்கேற்பு யு.பி.ஐ., பணப்பரிமாற்றத்தில், பணத்தை பெறுபவரின் பெயரை உறுதிப்படுத்தும் வசதி போல், நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்.,லும் வசதி அறிமுகப்படுத்தப்படும் தவறான கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடாமல் தடுக்கும் வகையில், பயனாளியின் பெயர் இடம்பெறும் அதிதீவிர மற்றும் சமநிலையற்ற வளர்ச்சியில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வேகம் காட்டக்கூடாது என ஆர்.பி.ஐ. எச்சரிக்கை பணக்கொள்கை குழுவின் அடுத்த கூட்டம், டிசம்பர் 4 முதல் 6ம் தேதி வரை நடைபெறும்.பணவீக்கம் ஒரு பாயும் குதிரைபணவீக்கம் என்பது பாயும் குதிரை போன்றது. மிகவும் சிரமப்பட்டு அந்தக் குதிரையை கட்டிப் போட்டிருக்கிறோம். அது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி விடாமல் கண்காணித்து வர வேண்டியிருக்கிறது. எனவே, பணவீக்கத்தை 4.50% என்ற இதே அளவில் சமநிலைப்படுத்த, வட்டி விகிதங்களை மாற்றுவதில்லை என குழுவினர் ஒருமித்த முடிவெடுத்தோம். நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இடையே ரிசர்வ் வங்கி சமநிலையை பராமரிப்பது அவசியம். - சக்திகாந்த தாஸ்கவர்னர், ரிசர்வ் வங்கி
அபராத வட்டி ரத்து
கடன் வட்டியில் மாற்றம் செய்யாதபோதும், சிறுதொழில் கடனை முன்கூட்டியே முழுதுமாக செலுத்தி கணக்கை முடிக்க விரும்புவோருக்கு ஒரு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாறும் வட்டி விகித முறையில் பெற்ற கடனை முன்கூட்டி செலுத்தினால், அபராத வட்டி வசூலிக்கும் நடைமுறையை ஆர்.பி.ஐ., ரத்து செய்து அறிவித்துள்ளது. வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு இது பொருந்தும்.