மேலும் செய்திகள்
அமெரிக்கா பெடரல் வங்கி வட்டியை 0.25% குறைத்தது
12-Dec-2025
கடன் வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்
10-Dec-2025
நிதி திரட்ட வருகிறது ஐ.ஜி.எக்ஸ்.,
04-Dec-2025
முதல் முறை வேலைவாய்ப்பு பெறுவது உற்சாகம் அளிக்கக் கூடியது. வேலைவாய்ப்பு சுயமாக சம்பாதிக்கும் திறனை அளிப்பதோடு, நிதி சுதந்திரத்தையும் அளிக்கக் கூடியது, தனிமனிதர்களின் வளர்ச்சி பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகவும் அமைகிறது. எனினும், இந்த நிதி பயணத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், எதிர்காலப் பாதையில் வளர்ச்சி வாய்ப்புகளோடு, பாதகமான பள்ளங்களும் இருக்கலாம். அதிக ஊதியம் தரும் புதிய வேலைக்கு மாறுபவர்களுக்கும் இது பொருந்தும். எனவே, நிதி பயணத்தில் தவிர்க்கவேண்டிய முக்கிய தவறுகளை அறிந்திருப்பது அவசியம்.பட்ஜெட் தேவை:
புதிதாக வேலைக்கு சேரும் பலரும் செய்யும் தவறு, பட்ஜெட் தேவை என்பதை உணராமல் இருப்பது தான். முதல் முறையாக சம்பாதிக்கும் போதே, வரவு - செலவு பற்றி கவலைப்பட வேண்டுமா எனும் கேள்வி எழுவது இயற்கை என்றாலும், வருமானத்தை மீறி செலவு செய்யாமல் இருப்பது முக்கியம்.சேமிப்பு இலக்கு:
பட்ஜெட் போலவே, சேமிப்பு இலக்குகளையும் பலரும் முக்கியமாகக் கருதுவதில்லை. இப்போதே சேமிப்பிற்கு என்ன அவசரம் எனும் எண்ணம் உண்டாகலாம். ஆனால், சேமிப்பு பழக்கம் அவசியம் என்பதோடு,துவக்கத்திலேயே சேமிக்கத் துவங்குவது பல விதங்களில் பலன் அளிக்கக்கூடியது.வாழ்வியல் செலவுகள்:
சம்பாதிப்பது சுதந்திர உணர்வையும், செலவிடும் அதிகாரத்தையும் அளிக்கும். விருப்பம் போல செலவு செய்யத் தோன்றும். எனினும், வாழ்வியல் தேவைகளுக்காக அதிகமாக செலவு செய்வது சிக்கலை உண்டாக்கலாம். குறிப்பாக, அதிக ஊதியம் அளிக்கும் புதிய வேலைக்கு மாறும் போது, வாழ்வியல் செலவுகளில் கவனம் தேவை.கடன் கவலை:
புதிதாக வேலைக்கு சேர்ந்ததும், கடன் வசதி சாத்தியமாகலாம். எனினும், தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் ஏற்கனவே கல்விக்கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன் இருந்தால், அவற்றை திரும்பச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.வருமான வரி சேமிப்பு:
வருமானம் ஈட்டும் வாய்ப்பு, வருமான வரி பொறுப்பையும் கொண்டு வரும். எனவே, வருமான வரி அம்சங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும். வரி பொறுப்புகளை உணர்வது, பட்ஜெட் முதல் சேமிப்பு, முதலீடு என அனைத்திலும் கவனம் செலுத்தி அதிக பலன் பெற உதவும்.
12-Dec-2025
10-Dec-2025
04-Dec-2025