மேலும் செய்திகள்
ரூ. 2.37 லட்சம் கோடி உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி.,
02-May-2025
புதுடில்லி:இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 41,480 கோடி ரூபாய் குறைந்து, 58.28 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக ஆர்.பி.ஐ., தெரிவித்து உள்ளது. இதில், வெளிநாட்டு கரன்சி சொத்துக்களின் மதிப்பு 2,371 கோடி ரூபாய் அதிகரித்து, 49.44 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு 38,700 கோடி ரூபாய் அதிகரித்து, 58.70 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது. கடந்த 2024 செப்டம்பரில், அன்னிய முதலீடுகள் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அன்னிய செலாவணி கையிருப்பு புதிய உச்சமாக 59 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
02-May-2025