உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வங்கிகள் மீது புகார் அதிகரிப்பு

வங்கிகள் மீது புகார் அதிகரிப்பு

கடந்த 2006ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியால், ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் புகார்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் அதிகரிப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.அண்மைக் காலமாக, வங்கிச் சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களின் புகார்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர். ஆனால், வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாக தீர்வு காணலாம்.- சஞ்சய் மல்ஹோத்ரா கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ganesun Iyer
மார் 22, 2025 05:48

அதிகமா புகார் வரக் கூடாதுன்னுதான் ஐந்து நாள் வேலைன்னு கேக்குறோம் யுவர் ஹானர்.. அடுத்த கோரிக்கை ஐந்து நாளுக்கு பதில் 3 நாள் வேலை அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளின்னு திட்டம் வைத்திருக்கிறோம் யுவர் ஹானர்..


Sujatha Natarajan
மார் 20, 2025 22:53

ஐயா,ரிசர்வ் வங்கி கவர்னர் அவர்களே முழு பணத்தையும் கட்டச்சொன்னதை திரும்ப பெருங்கள்.உங்களுக்கு புண்ணயம் போகும்


Sujatha Natarajan
மார் 20, 2025 22:50

மொத்த பணத்தையும் கட்டி மீட்பதற்கு வக்கு இருந்தால் நாங்க ஏன் நகை அடகு வைக்கிறோம்.


Baskaran Kalai
மார் 20, 2025 19:50

கேஒய்சி அடிக்கடி கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். பணமும் அடிக்கடி பிடிக்கிறார்கள் வங்கிக்கு போனால் ஒரு மரியாதையே இல்லை ஆடு மாடு போல் நினைக்கிறார்கள்.படிக்காதவர்கள் போனால் எதையுமே சொல்வது இல்லை.


Supra Maniyan
மார் 20, 2025 19:38

கோடிக்கணக்கில் கடனை ஏமாற்றி ஓடுகிறான் அவன் பிடிக்க துப்பு இல்லை நகையை வச்சுக்கிட்டு வட்டிக்கு வாங்கலாம் வருஷம் ஆச்சுன்னா வட்டி கட்டுறான் அது புதுப்பிச்சி கொடுத்தால் என்ன மோசம் போகுது. வந்து...பேங்க்ல மேனேஜர் நிர்வாகம் சரியில்லை


Regesh Anand
மார் 20, 2025 14:18

வங்கிகள் லாபம் மற்றும் அதன் வியாபாரத்தை மட்டுமே கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர் சேவையை பற்றி கவனம் கொள்வதே இல்லை


dorairaj venkatraju
மார் 20, 2025 11:59

கனரா வங்கி மட்டுமல்ல அனைத்து வங்கிகளும் கந்து வட்டி கும்பல் போல நடந்து கொள்கிறார்கள். நகையை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் நிலைமை பரிதாபம். உடனே முழுத் தொகையையும் செலுத்தி திருப்ப சொல்வது மட்டுமல்லாமல் திமிர் பேச்சு வேறு. உடனே அரசாங்க சட்டம் என்று மிரட்டல் வேறு.


Supra Maniyan
மார் 20, 2025 19:34

கோடிக்கணக்கில் கடன் வாங்கிட்டு ஓடிப் போறான் நகையை வைத்துக்கொண்டு வட்டியை மட்டும் வாங்குனா என்ன மோசமா போகுது. நகைதான் பேங்க்ல இருக்குது. ஏன் அதை வட்டி கட்டினால் என்ன? பேங்க் மோசம்


Anuvindh
மார் 20, 2025 11:21

முக்கியமா கனரா வங்கி. லோன் கட்ட ஒரு மாதம் தாமதம் ஆனால் மிரட்டும் தோணியில் பேசுகிறார்கள். பெரிய கடன் வாங்குறவர்களை விட்டு விட்டு ஒரு மாதம் தாமதமாக கட்டினால் நாம காலி . கடன் வாங்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.


சமீபத்திய செய்தி