உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / இந்திய வளர்ச்சி கணிப்பு: ஆசிய வங்கி குறைத்தது

இந்திய வளர்ச்சி கணிப்பு: ஆசிய வங்கி குறைத்தது

புதுடில்லி:ஆசிய வளர்ச்சி வங்கி, நடப்பாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி குறித்த அதன் கணிப்பை, முன்பிருந்த 7 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைத்துள்ளது.அதே போல, அடுத்தாண்டுக்கான வளர்ச்சி கணிப்பையும் 7.20 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளது.தனியார் முதலீடு, வீடுகளின் தேவை ஆகியவற்றில் எதிர்பார்ப்பை விட குறைவான வளர்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, டிரம்ப் தலைமையிலான அரசின் கீழ் அமெரிக்க வர்த்தகம், நிதி மற்றும் குடியேற்ற கொள்கைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்றும்; பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதி நாடுகளுக்கான நடப்பாண்டு வளர்ச்சி கணிப்பையும் 5 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக, ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை